
இதுபற்றி சினேகாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-
நான் நீச்சல் உடையிலும் முத்த காட்சியிலும் நடிப்பதாக சொல்வது நல்ல தமாஷ். சினிமாவில் நுழைந்ததுமே இதுபோன்ற காட்சிகளில் நடிக்க என்னை நிர்ப்பந்தித்தனர். பணத்துக்கு ஆசைப்பட்டு இருந்தால் அப்போதே அதுபோன்று நடித்து இருப்பேன். இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆங்கில படத்தில் நடிக்கிற வாய்ப்பு ஒன்றும் எனக்கு வந்தது. ஆனால் அதில் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருந்தது. எனவே அதில் நடிக்க மறுத்துவிட்டேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
இவ்வாறு சினேகா கூறினார்.