தெலுங்கு பட இயக்குனர் ஆதித்யா, முழுவதும் பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தை எடுக்க போகிறோம்.இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரீமா பொருத்தமானவர் என்பதால் அவரை நடிக்க வைக்க முடிவு எடுத்தோம் என்கிறார். இவர் இயக்கிய தெலுங்கு படம் ஒன்றில் வெற்றி நாயகியானார் ரீமா. அதற்கு பிறகு ரீமாவுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் நடித்த பின்னர், மீண்டும் தமிழுக்கு தாவினார். இந்த ரொமான்டிக் கொமெடி படத்தில் ஸ்ரதா தாஸ், சஞ்சனா ஆகிய நாயகிகளுடன் ரீமா நடிக்கிறார். நவ்தீப், ராகுல் இரு நாயகர்களுடன் இணைகிறார். இந்த படம், பாலிவுட் படத்தின் ரீமேக் என்று பரவிய தகவலை இயக்குனர் ஆதித்யா மறுத்துள்ளார். எப்படியோ, தெலுங்கு பக்கம் பிஸியாக இன்னொரு சுற்று வர ரீமா திட்டமிட்டுள்ளார். |