Tuesday, May 17, 2011
பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி "பருத்திவீரன்" படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்த ப்ரியாமணி பரத்துடன் "ஆறுமுகம்" படத்திற்கு பிறகு காணாமல் போனார்.
தற்போது தெலுங்கு பக்கம் முகாமிட்டு இருக்கும் ப்ரியாமணி "ஷேத்திரம்" என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகியோருடன் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை என்று கேட்டபோது, இதுகுறித்து அவர் கூறியதாவது, வழக்கம் போல ஒரு சினிமா என்றால் டூயட், ஆடி பாடி, அழுது நடிப்பதில் ஆர்வம் இல்ல. கதை நன்றாக இருக்க வேண்டும். ஒரு உணர்வு வர வேண்டும். படத்தை பார்த்து மக்கள் ரசிக்க வேண்டும்.
இப்போது சமீபத்தில் வெளிவந்த யதார்த்தமான சில படங்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. படம் ரொம்ப நன்றாக உள்ளது. மக்களிடத்தில் நன்றாக போய் சேர்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன.
எனக்கும் அந்த மாதிரி படங்கள் எல்லாம் வந்தால் நான் ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறேன். தமிழ் சினிமாவில் இருக்கும் நல்ல நல்ல டைரக்டர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக டைரக்டர் தரணி, முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.