கொலிவுட் படங்களில் நடிக்க வந்தவர், தெலுங்கில் சித்தார்த் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராசு, தயாரிக்கும் தற்போதைய படத்தில் நடிக்க கதை கேட்ட ஹன்சிகா, நிபந்தனைகளை ஏற்று கையெழுத்திட்டாராம். கண்டிரீகா தெலுங்கு படத்தில் ஹீரோ ராம் உடன் இணைந்து நடிக்கிறாராம்.
தமிழ் - தெலுங்கு பட வாய்ப்புகள் ஒரே நேரத்தில் வர கொஞ்சம் திணறினாராம் ஹன்சிகா. கொலிவுட்டில் தனுஷ், ஜெயம் ரவி ஆகிய ஹீரோக்களுடன் நான் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்கள் வெளியானதும் எனக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தன. உணர்ச்சி வசப்பட்டு சிலிர்த்தேன். இரண்டு பட உலக வாய்ப்பையும் எப்படி எதிர் கொள்வது என்று யோசித்து தீர்க்கமாக முடிவெடுப்பதால், என்னால் கவலையில்லாமல் இருக்க முடிகிறது. படத்தில் நடித்து பழம் தின்று கொட்டை போட்ட கொலிவுட்டின் மூத்த நடிகையான குஷ்பூ மேடத்தொடு என்னை ஒப்பிடுவது, ரசிகர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் காட்டுகிறது என்றும் கூறியுள்ளாராம் ஹன்சிகா மொத்வானி. |