இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில், படத்தின் தலைப்பை திரும்பி பார்க்கவும், படத்தை விரும்பி பார்க்கவும் இயக்குநர்கள் படாதபாடுபடுகின்றனர். அதற்கு சமீபத்திய வந்த படங்கள், இனி வரப்போகும் படங்கள் சாட்சி. புதுமுக இயக்குநர் எல்வின் என்பவர், சக்தியை வைத்து ஒரு புதுபடம் ஒன்றை இயக்குகிறார். இந்தபடத்திற்கு ஏதோ செய்தாய் என்னை என்று தலைப்பு வைத்துள்ளனர். சக்திக்கு ஜோடியாக பேராண்மை லியா நடிக்கிறார். எழில் என்பவர் படத்திற்கு ஒளிப்பதிவும், தயாரிப்பும் செய்கிறார்.
காதலை மையப்படுத்தி, அந்தகாதலை புதிய கோணத்திலும், அருவா, ஆர்ப்பாட்டம் இல்லாத ஆக்ஷன் கலந்து சொல்லும் படமாக இந்தபடம் இருக்கும். மேலும் இந்தபடத்தில் நான்கு வில்லன்கள், இதில் வில்லன்களாக ஆனந்த், ஆனந்த்பாபு, ரகுமான், இளவரசு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நால்வரையும், ஹீரோ சக்தி எப்படி சமாளித்து, தன் காதலை ஜெய்கிறார் என்பதை மிக அழகமாக படமாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் எல்வின்.