காதல் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த நடிகை சமீரா ரெட்டி, ஆமாம்! நான் காதலிக்கிறேன் என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார். பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வந்த சமீரா சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்குப்படங்களில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால், "மூன்று மொழி படங்களில் நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நிலையானவர்கள். ஒருமுறை அவர்களுக்கு பிடித்து விட்டால் எப்போதும் கொண்டாடுவார்கள். ஆனால் இந்தி ரசிகர்கள் அப்படியில்லை. இன்று ரசிப்பார்கள், நாளை மறந்து விடுவார்கள், அதனால் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என்று கூறுகிறார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் படத்தில், நடிகர் விஷால் ஜோடியாக நடித்து வரும் சமீரா, அடுத்து சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.
யாரையாவது காதலிக்கிறீர்களா? கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு பதில் அளித்த சமீரா ரெட்டி, நான் நடிப்பில் பிஸியாக இருக்கிறேன். சினிமாதான் எனக்கு எல்லாமே. இப்போதைக்கு சினிமாவைத்தான் காதலித்துக் கொண்டிருக்கிறேன். மற்றபடி காதலைப் பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ யோசிக்கக் கூட நேரமில்லை. இளமை இருக்கும்போது சம்பாதித்து விட வேண்டும், என்கிறார்.