ஒரு படத்திலாவது விருது வாங்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறேன்’ என அஞ்சலி கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘கருங்காலி’, ‘மகாராஜா’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த சில கேரக்டர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஒரு படத்திலாவது விருது வாங்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறேன். அதற்காக, நடிப்புக்கு சவால் விடும் கேரக்டர்களைத் தேடி நடிக்கிறேன். எனது ஆசை நிறைவேறிய பிறகு பிற மொழி படங்களில் நடிப்பேன்’ என்றார்.