Friday, July 01, 2011
கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் படம் விஸ்வரூபம் என்பது 100 சதவீத உண்மையாகி விட்டது. இந்த படம் வரலாற்றுக் கதையா, கிராமத்து கதையா, சிட்டி கதையா என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக ஒருபுறம் கோடம்பாக்கதில் விவாதம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் விஸ்வரூபம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆரம்பத்தில் செல்வராகவன் இயக்கவிருந்த இப்படத்தை பின்னர் கமல்ஹாசன் இயக்குவதாக கூறப்பட்டது. அந்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், படத்தின் நாயகி சோனாஷி சின்கா, படத்தில் விலகி விட்டதாக செய்தி வெளியானது.
எதுவுமே அதிகாரப்பூர்வ தகவல் இல்லாமல், தினந்தோறும் புதிது புதிதாக தகவல்கள் வெளியாகிவரும் அதே நேரம், விஸ்வரூபம் பற்றி கமல்ஹாசனிடம் கேட்டால், இப்போதைக்கு எந்த செய்தியும் வேண்டாமே...! என்ற பதில்தான் வருகிறது.