Thursday, April 28, 2011
ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி பெண் ரஞ்சனியை நடிகர் கார்த்தி திருமணம் செய்கிறார். இவர்களின் திருமணம் கோவையில் ஜூலை 3ஆம் தேதி நடக்கிறது.
நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி பருத்தி வீரன் ஆயிரத்தில் ஒருவன் பையா நான் மகான் அல்ல சிறுத்தை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கார்த்தி சென்னை கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் பி.இ முடித்துவிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரியல் பொறியியல் படிப்பில் எம்.எஸ். பட்டம் பெற்றவர்.
இவருக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சின்னச்சாமி-ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனி. இவர் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து தங்க பதக்கம் பரிசு பெற்றவர்.
கார்த்தி - ரஞ்சனி திருமணம் ஜூலை 3ஆம் தேதி கோவையில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை.