Monday, May 23, 2011
அஜித்தின் கொள்கை முடிவுகளை அத்தனை சீக்கிரம் யாரும் மாற்றி விட முடியாது. சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அஜித் உதடு பிசகாத ஹீரோ என்று சொல்லிவிடலாம்.
காதல் மன்னன் படத்தின்வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர்அஜித்திடம் கேட்டார். உதட்டோடு உதடு பதித்து இங்கிலிஷ் கிஸ் கொடுத்து நடிப்பீர்களா? அஜித்தோ நீங்கள் எனது படங்களை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். நான் முத்தக்காட்சிகளில் நடிப்பதையே ஒட்டுமொத்தமாக தவிர்க்க விரும்புகிறேன்.
முத்தக்காட்சிகளை நான் விரும்பவில்லை. காதல்மன்னனில் இடம் பெற்றது கூட ட்ரிக் ஷாட்தான்.என்றார். தற்போது மீண்டும்அதேபோன்றதொரு முத்தக்காட்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார் அஜித். மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில்த்ரிஷாவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தினாராம் வெங்கட்பிரபு.
தல தரப்போகும் முத்தமாயிற்றே என்று த்ரிஷாவும் ஆசையாக காத்திருக்க கடைசியில் தலைக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது. முத்தக்காட்சி வேண்டாம் சாரி பிரபு என்று காறாராக கூறிவிட்டாராம் அஜீத்.வேறு வழியில்லாமல் அந்தக் காட்சியை ட்ரிக் ஷாட் மூலம் எடுத்திருக்கிறார்கள்.