அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக ரஜினி வெளிநாட்டுக்கு செல்லப் போகிறார் என்றும், அதெல்லாம் இல்லை. அவர் இங்குதான் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகிறார் என்றும் இருவேறு தகவல்கள் ரசிகர்களை குழப்பி வருகிறது. இந்த நேரத்தில் இன்னும் ஒரு குழப்பம்.
அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே சிறுநீரக தானம் செய்ய முடியும் என்பதால் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் அதற்கு முன் வந்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது சிறுநீரகங்கள் பொருந்தினால் மட்டுமே அதற்கு சாத்தியமிருக்கிறது.
துரதிருஷ்டவசமாக இரண்டுமே பொருந்தவில்லையாம் ரஜினிக்கு. மனைவி லதா முன் வந்தாலும் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அந்த திட்டத்தையும் கைவிட்டிருக்கிறார்களாம் மருத்துவர்கள்.