

இதனை வருமான வரித்துறையின் இரு நபர் தீர்ப்பாயம் விசாரித்தது. நான் தொழில்முறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன் என்றாலும், விளம்பரத்தில் நடித்து சம்பாதித்த பணத்துக்கு மட்டும்தான் வரிச்சலுகை கோருகிறேன். இதற்கு முன்பு இதேபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்று சச்சின் தரப்பில் கூறப்பட்டிருந்தது. தான் நடித்த விளம்பரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார். சச்சின் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம் அவர் வருமான வரியில் சலுகை பெற அனுமதி அளித்தது.
சச்சின் வரிச் சலுகை கோரும் காலகட்டத்தில் அவர் மொத்தம் 20 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதில் அன்னியச் செலாவணி மூலம் கிடைத்தது சுமார் 6 கோடி என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதற்காக அவருக்கு சுமார் ரூ.6 கோடி வருமான வரி பிடிக்கப்பட வேண்டும். ஆனால் சச்சின் போராடிப் பெற்ற சலுகையால் சுமார் ரூ.2 கோடி மட்டுமே வரிப்பிடித்தம் செய்யப்படும். 4 கோடி ரூபாய் அவருக்கு மிச்சமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.