
தற்போது அஜீத், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "மங்காத்தா" படத்தில் நடித்து வருகிறார். அஜீத்தின் 50வது படமான இப்படம் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. "மங்காத்தா" படத்தை ரிலீஸ் செய்யும் முன் "பில்லா-2" படத்திற்கான வேலையில் இறங்கி இருக்கிறார் அஜீத். "மங்காத்தா" படத்தில் நரையு முடியுடன் மாறுபட்ட வேடத்தில் நடித்து வரும் அஜீத், பில்லா - 2வில் 20வயது பையனாக நடிக்கிறாராம். இதற்காக தனது உடல் எடையை குறைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் அஜீத். மேலும் படத்தில் அஜீத்தை இளைஞனாக காட்ட ஹாலிவுட்டில் இருந்து பிரபல மேக்கப்மேன்களை வரவழைக்க உள்ளனராம். அந்த மேக்கப்மேன் அஜீத்துடன் தங்கி அவருக்கு தேவையான டிப்ஸ்களை கொடுப்பார். கடந்த வாரம் தான் "பில்லா 2" படத்தின் முதல் போட்டோ ஷூட் நடந்தது. "மங்காத்தா" படத்தின் ரிலீஸ்க்கு முன்பே "பில்லா-2" படம் துவங்க இருக்கிறது.