
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் கூறுகையில், அவன் இவன் படத்தின் ஓபனிங்கில் இருந்து இப்போது வரைக்கும் அனைத்து தியேட்டர்களிலும் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரிலீசான ஒரு வாரத்திற்குள்ளேயே ரூ.35 கோடி வரை வசூலாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் அவன் இவன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும், படத்தை பார்க்க ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.