இளைய தளபதி விஜய்-க்கு அடுத்த அடுத்த பெரிய படங்கள் கையில் உள்ளன. தற்போது ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க போகிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மற்றும் (விஜய்)அவரது தந்தை சந்திரசேகர் இணைந்து தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய்-க்கு ஜோடியாக இந்தி நடிகை சோனம் கபூர் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளதாம். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இதை பற்றி முழுமையான விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகின்றன.