

நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன் என்றார்