
இரண்டாம் உலகம் படத்தை தொடர்ந்து டைரக்டர் செல்வராகவன் அடுத்து கமலை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதில் கமலுக்கு ஜோடியாக சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங்கை கனடாவில் நடத்த திட்டமிட்டு இருந்தார் டைரக்டர் செல்வா. இதற்காக விசா அப்ளே செய்து இருந்தார். ஆனால் விசா பிரச்சனையால் இப்படத்தின் சூட்டிங் தள்ளிக்கொண்டே போனது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக தள்ளிபோகி வந்த நிலையில், கடந்த வாரம் விசா கிடைத்ததாக செய்திகள் வந்தது.
இந்நிலையில் இப்போது விசா கிடைக்கவில்லை என்றும், கனடாவில் நடக்க இருந்த சூட்டிங்கை லண்டனுக்கு மாற்றி இருப்பதாகவும், விரைவில் விஸ்வரூபம் டீம் லண்டன் புறப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இங்கு கமல், சோனாக்ஷி சம்பந்தப்பட டூயட் காட்சிகள், காதல் காட்சிகளை படமாக்க இருக்கின்றனர்.