Monday, May 23, 2011
ஆந்திர ஃபாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய மல்டி ஸ்டாரர் படமான வேதத்தை, தமிழில் வானமாக்கி, இங்கேயும் அதை வெற்றிப் படமாக்கியிருகிறார் அந்தப்படத்தின் இயக்குனர் கிரிஷ்.
கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு படவுலகிலும் முன்னனிக் கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்கா, இந்தப்படத்தில் கிருஷூக்காகவே பாலியல் தொழிலாளி காதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார். அனுஷ்கா-கிரிஷ் இரண்டு பேரும் காதல் பறவைகள் என்று மீடியா துணிச்சலாக எழுதிகொண்டிருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே இதுபற்றி முழுமையாக வாய் திறக்கவில்லை.
ஆனால் அனுஷ்காவை பாலிவுட்டில் சரியான படத்தின் மூலம் களமிரக்கவேண்டும் என்று முடிவு செய்திருகிறாராம் கிரிஷ். அது ஏன் நமது வானமாகவே இருக்கக் கூடாது என்று முடிவு செய்தவர், தற்போது இந்தியிலும் இந்தப்படத்தை ரீமேக் செய்ய களமிறங்கி இருக்கிறார் கிரிஷ். இதற்காக முப்பையில் தனது அலுவலகத்தை கிருஷ் திறந்திருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்கம் ரீமேக்கில் நடிக்க மறுத்ததால் அனுஷ்காவின் பாலிவுட் எண்ட்ரி ஏன் தள்ளி வைக்கப்பட்டது ஏன் என்று புரியுமே என்று கேட்கிறார்கள் இயக்குனர் கிரிஷ் வட்டாரத்தில். அதுவுமில்லாமல் கிரிஷை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லியிருகிறாராம் ஜீவா. ஆனால் இப்போதைக்கு என்னிடம் கதை இல்லை என்று சொல்லி மும்மையில் முகாமிட்டு இருகிறாராம் கிரிஷ். காதலுக்காக எதையும் செய்யுற ஊரு இது தானாமே