
சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை கே.வி. ஆனந்த் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க டாப்ஸியை அணுகினார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இதுகுறித்து டாப்ஸி கூறியதாவது:-
நிறைய படங்கள் கைவசம் இருப்பதால் மாற்றான் படத்தில் நடிக்க இயலவில்லை. இதை கடைசி படமாக நினைக்கவில்லை. சூர்யா ஜோடியாக நிச்சயம் நடிப்பேன்.
கே.வி. ஆனந்த் சிறந்த இயக்குனர். அவர் டைரக்ஷனிலும் நடிப்பேன். இதுவரை 7 படங்களில் நடித்துள்ளேன். எனது பிறந்த நாட்களில் பெற்றோருடன் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். இரவு விருந்துகளில் பங்கேற்று விட்டு மறுநாள் கஷ்டப்பட்டு விழிப்பது எனக்கு பிடிக்காது.