

தமிழில் இருப்பது போல், இவருக்கு கன்னடத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனை பலமாக வைத்து நமீதாவின் பெயரிலேயே ஒரு படத்தை இயக்கினார் கன்னட இயக்குனரான ஜெயசிம்மா ரெட்டி.
இப்படத்திற்கு ‘ஐ லவ் யூ நமீதா’ என்று பெயரிட்டிருந்தார். இதில் யோகா டீச்சராக நடித்திருக்கிறார் நமீதா. கதைப்படி, படிப்பில் கவனம் செலுத்தாமல் செக்ஸ் மோகம் பிடித்து திரியும் இளைஞர்களை, யோகா டீச்சராக வரும் நமீதா திருத்துகிறார்.
சில பாடல்களில் நமீதா கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறாராம். அப்படி இருந்தும் இப்படம் படு தோல்வி அடைந்து விட்டதாம். அவரது தீவிர கன்னட ரசிகர்களால் கூட இப்படத்தை உட்கார்ந்து பார்க்க முடியிவில்லையாம். இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடும் திட்டத்தை வைத்திருந்தனராம். அங்கே படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இது தமிழுக்கு வருமா என்பது சந்தேகம்தான் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.