Wednesday, June 08, 2011
ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான வெள்ளாவி பொண்ணு டாப்சிக்கு தமிழில் ஏகப்பட்ட வரவேற்பு. இருப்பினும் அம்மணி டைரக்டர் கண்ணனின் இயக்கத்தில் ஜீவாவின் வந்தான் வென்றான் படத்திற்கு பிறகு எந்த படத்திற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது தெலுங்கில் ரம்யாகிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் கோபிசந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே பாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருவதால் விரைவில் பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். பாலிவுட்டின் பிரபல டைரக்டர் டேவிட் தாதன் இயக்கும் புதிய படம் ஒன்றில் டாப்சி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது தமிழ், தெலுங்கு படங்களை முடித்த பின்னர் இந்தியில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதனால் தமிழ் படங்களுக்கு நோ சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.