Monday, May 23, 2011
2010ம் ஆண்டுக்கான கேரள அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக சலீம் குமாரும், சிறந்த நடிகையாக காவ்யா மாதவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் கேரள அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி 2010ம் ஆண்டுக்கான மலையாள திரைப்பட விருதுகளை, அம்மாநில அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் அறிவித்தார். அதன்படி
சிறந்த படத்திற்கான விருது சலீம் அகமது இயக்கிய, ஆதாமின்தே மகன் அபு படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.
சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு எலக்ட்ரா படத்தை இயக்கிய ஷியாம் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருதுக்கு, "ஆதாமின்தே மகன் அபு" படத்தில் நடித்த சலீம் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவருக்கு இந்த படத்திற்கு சிறந்த நடிகருக்காக தேசிய விருதுக்கும் தேர்வாகியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருதுக்கு கதாமா படத்தில் நடித்ததற்காக காவ்யா மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த பாடகருக்கான விருதுக்கு ஹரிஹரனும், பாடகிக்கான விருதுக்கு ராஜலெட்சுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.