Monday, May 23, 2011
ஊரை விட்டு வெளியேறும் அஸ்வின், திருநங்கை ப்ரியாவின் உதவியால் மும்பைக்குச் சென்று, அங்குள்ள திருநங்கைகளுடன் பழகி, அவர்களது உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறுகிறான். மும்பையில் இருந்தால் விபச்சாரத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் திருநங்கை அஸ்வின் பழகிய நடன வாத்தியார் உதவியோடு திருவையாறு திரும்புகிறாள். அங்கு பரதநாட்டிய மேதை கிரிஷ் கர்நாட் உதவியால் நாட்டியத்தில் சிறந்து விளங்குகிறாள். திருநங்கை அஸ்வின் ஒருவனை காதலித்து, திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறாள். அவனோ அவளை கழற்றிவிட்டு கம்பி நீnullட்டி விடுகிறான். தன் கணவனால் ஏமாற்றப்பட்டதை அறிந்து, காதல் வலியை மறக்க முடியாமல் சொந்த கிராமத்திற்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று தெரியவருகிறது. அது என்ன? என்பது பரபரப்பான க்ளைமாக்ஸ் காட்சி!
இப்படம் திருநங்கைகள் படும் பாட்டையும், பிறகு காதல், கல்யாணம் என்று வரும்போது அவர்களுக்கு ஏற்படும் வலிகளையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. அஸ்வின் தனது மாமன் மகளிடம் இருந்து விலகும்போதும், நண்பர்களால் அவமானப்படும்போதும், தந்தையிடம் அடிவாங்கும்போதும் அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். திருநங்கை கல்கியின் காதலும், ஏமாற்றமும் பரிவுகளை அள்ளுகிறது.
சிலம்ப வாத்தியாராக நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷ், அவரது மனைவியாக வரும் சூசன் ஆகியோர் சரியான தேர்வு. சோப்பு மாமாவாக வரும் வி.கே.ஆர்.ரகு சென்டிமென்ட் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். அவரது மகளாக வரும் லீமா பாடல் காட்சியிலும், வேதனைப்படும் காட்சிகளிலும் மனதைத் தொடுகிறார். கேசவனின் ஒளிப்பதிவில் அந்த ஆற்றங்கரையும், பழைய கோவில்களும் மனதை விட்டு அகலவில்லை. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் நா. முத்துக்குமார் எழுதியுள்ள பாடல்கள் படம் முடிந்து வெளியே வந்த பின்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. யாரும் கையில் எடுக்கத் துணியாத ஒரு கதையை எடுத்து அதை உணர்வுnullர்வமான, யதார்த்தமான காட்சிகளோடும், மனதில் நிற்கும் சம்பவங்களோடும் சிறப்பாக இயக்கியிருக்கிறார்