
அஞ்சலி கூறியது: ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் சரவணன் இயக்கும் ‘எங்கேயும் எப்போதும்' ஷூட்டிங்குக்காக திருச்சி, விழுப்புரம் என ஊர் ஊராக சுற்றி வந்தேன். தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறேன். ‘கருங்காலிÕயில் கல்யாணம் ஆன பெண், ‘மகராஜாÕவில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்பவள். ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்Õல் கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறேன். கேரக்டர், தயாரிப்பு பேனர் இதைத்தான் முக்கியமாக பார்க்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களை ஏற்பதில்லை. அதே போல் 5 அல்லது 6 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் வேடம் என்றால்கூட ஏற்பதில்லை. அதற்கு இன்னும் வயது இருக்கிறது. படத்துக்கு முக்கியமென்றால் கிளாமராக நடிப்பேன். தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. சம்பளம் ஏற்றிவிட்டீர்களா என்கிறார்கள். எனக்கு என்ன சம்பளம் தர வேண்டுமோ அதைத்தான் தருகிறார்கள். நானாக சம்பளம் ஏற்ற மாட்டேன். உயர்த்தி தர வேண்டிய நேரம் வரும்போது தானாக உயரும்.