Thursday, 14 July 2011
ரூ. 45 லட்சம் கேட்டு வடிவேலுவை மிரட்டும் இணையதள ஆசிரியர்.
Thursday, July 14, 2011
நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
"ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.