Friday, July 15, 2011
சோனாவுக்கு இரண்டு சினிமா கனவுகள் உண்டு. ஒன்று விஜய் நடிக்கும் படத்தை பிரமாண்டமாகத் தயாரிப்பது. இன்னொன்று தன் சொந்த வாழ்க்கையை படமாக்குவது. படத்தில் வாழ்க்கையில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களையும், துரோகம் செய்தவர்களைப் பற்றியும் சொல்லுவேன் என்கிறார் நடிகை சோனா.
ஜெயா டி.வி.யில் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் தன் இசை உலக அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிறார் பாடகர் தீபன் சக்ரவர்த்தி. ""பூங்கதவே தாழ் திறவாய்...., ""அரும்பாகி மொட்டாகி... உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு கனிந்து, கர்ஜித்து குரல் கொடுத்த தீபன், தன் தந்தையும், பின்னணிப் பாடகருமான திருச்சி லோகநாதனை பற்றிய நினைவுகளையும் இதில் பகிர்ந்து கொள்கிறார். தினமும் இரவு 10 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
வாழ்க்கை வரலாற்று படங்களில் இடம் பிடிக்கப் போகிறார் பாபா. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கை சினிமாவாகிறது. பாபாவாக நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ் தரப்பில் இருந்து இன்னும் ஓ.கே. சொல்லப்படவில்லை. சின்ன வயது பாபாவாக நடிக்க இந்தியாவின் பிரபல குழந்தை நட்சத்திரங்களின் பட்டியலை வாங்கியிருக்கிறார் கோடி.
மேற்கத்திய பாடகர்களுடன் இணைந்து ஆங்கில இசை ஆல்பம் உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பத்து நாள்களில் 29 பாடல்களைப் பதிவு செய்துள்ளாராம்.
பாப் இசை உலகில் இது புது சாதனையாம். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள புகழ் பெற்ற ஜிம் ஹென்சன் ஸ்டுடியோவில் சில பாடல்கள் பதிவாகியுள்ளன.
மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர் தோனியின் மனைவி சாக்ஷி சிங்
ராவத். பைக் விளம்பர படம் ஒன்றில் ஒரு பெண்ணோடு ரவுண்டு அடிக்க வேண்டும் என விளம்பர நிறுவனம் சொல்ல, அந்தப் பெண் என் மனைவியாக இருக்கலாமா? என்று கேட்டு இருக்கிறார் தோனி. விளம்பர நிறுவனம் ஒ.கே. சொல்ல, டபுள் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது தோனிக்கு.
இந்த ஆண்டு தேசிய விருது பெற்ற மலையாளப் படமான "ஆதாபிண்டே மகள் அபு" படத்தின் ரீமேக் உரிமையை பெற்றிருக்கிறார் கரண் ஜோஹர். மிகவும் ஏழ்மையான இஸ்லாமிய கணவன் - மனைவி ஹஜ் பயணம் செல்ல எவ்வளவு போராடுகிறார்கள் என்பதுதான் கதை. கரண் ஜோஹர் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கிறார்.
கிரிக்கெட்டில் நடக்கும் பெட்டிங் பின்னணிதான் "மங்காத்தாவின் கதை. வாழ்வின் அனைத்தையும் இழந்த ஒருவன் எப்படி பெட்டிங் உலகுக்கு தலைவன் ஆனான் என்பதே கதையின் ஒன் லைன். அசாரூதின், ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் எப்படி பெட்டிங்கில் மாட்டினார்கள். அது வெளிவந்தது எப்படி என்பதும் கதையில் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். ஹைதராபாத்தில் பெட்டிங் நடக்கும் ஹோட்டல்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாம் "பொன்னியின் செல்வன், "பகலவன் இரண்டு படங்களும் டிராப். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.
இதை விஜய் தரப்பே உறுதி செய்துள்ளது. "ஏழாம் அறிவு படத்துக்குப் பின் ஹிந்தியில் அக்ஷய்குமாரை இயக்க வந்த வாய்ப்பை, உதறித் தள்ளி விஜய்யை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோனே.
நடிகைகளைக் காதலித்து மணக்கும் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் சேருகிறார்கள் ஜாகீர்கானும், ஹர்பஜன் சிங்கும். ஜாகீரின் ஜோடி கமலின் "விஸ்வரூபம் படத்தில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார். படம் முடிந்ததும் இஷான் ஷெர்வானியை கரம் பிடிக்கிறார் ஜாகீர். ஹர்பஜன் - கீதா பஸ்ரா ஜோடிக்கு வரும் டிசம்பரில் திருமணம்.