இவரது காதலர் பாலிவுட் ஹீரோவுமான, மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக் ஓகஸ்ட் முதல்வாரத்தில் தனது ஜாதகப்படி திருமணம் செய்துகொள்வது திருமண வாழ்கைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நெருக்கடி கொடுப்பதால் விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட 'வேலாயுதம்' படத்தின் தயாரிப்பாளர், ஜெனிலியாவுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளாரம்.ஓகஸ்ட் 28ஆம் திகதி வேலாயுதம் வெளியாகிறது. 'வேலாயுதம்'வெளியாகி மூன்று வாரங்கள் கழித்தே திருமணம் செய்துகொள்ள வேண்டும். இது என் அன்புக்கட்டளை என்றாராம். இந்த வேண்டுகோளை ஜெனிலியா ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர் வட்டாரத்தில். ஜெனிலியா திருமணம் 'வேலாயுதம்' வசூலை பாதிக்கக் கூடாது என்று நினைக்கிறார் ஆஸ்கர் ரவி. |