இந்த படத்தில் நகுல் - பிந்து மாதவி இருவரையும் இணைத்து வைத்துள்ளார். படத்துக்கு சரியான தலைப்பை தேர்ந்தெடுக்கும் முன்பே படப்பிடிப்பை துவக்கி விட்டோம்.முதல் கட்டமாக சென்னையில் எடுத்து விட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பை மதுரையில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். என் திரைக்கதையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீரராக வருகிறார் நகுல். மாதக்கணக்கில் நகுலை கூடைப்பந்து விளையாட வைத்துள்ளேன். இதற்காக வியர்வை சிந்தி, கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்துள்ளார். அவர் நன்றாக விளையாட பழகிய பின்னர் தான் படப்பிடிப்புக்கு போக முடியும் என்பதையும் சொல்லிவிட்டேன் என்றாராம் டைரக்டர் அறிவழகன். |