Monday, May 16, 2011
தேர்தல் முடிவுகள் குறித்து ``இது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி'' என்று தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளதற்கு நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா, அ.தி.மு.க. வக்கீல்கள் பிரிவு உட்பட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்த விபரம் வருமாறு:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. தி.மு.க. தோல்வியை தழுவியது. தி.மு.க.வுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் நடிகை குஷ்பு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு, இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் மக்கள் மிகவும் கஷ்டப்படப் போகிறார்கள் என்று கூறியிருந்தார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகை விந்தியா, குஷ்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். நடிகர் எஸ்.வி. சேகர் கூறும் போது, குஷ்பு அரசியலுக்கு புதுசு. அவருக்கு அனுபவம் இல்லை என்று கருத்து தெரிவித்தார். சென்னை ஐகோர்ட்டு அ.தி.மு.க. வக்கீல்கள் பிரிவு சார்பிலும், குஷ்புவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மக்களின் மன உணர்வை புண்படுத்தி பேட்டி கொடுத்த குஷ்புவை வன்மையாக கண்டிக்கிறோம் என்பது போன்ற வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் ஐகோர்ட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.