பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெஞ்செரிச்சல், தொண்டைவலி காரணமாக உடலில் சோர்வு ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல முறை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல நாட்கள் ஓய்வில் இருந்து டாக்டர்களின் கடும் முயற்சியால் மீண்டு வந்தவர் அமிதாப் பச்சன்.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறு மற்றும் தொண்டையில் வலியால் அவதிப்படுவதாக அவர் தனது பிளாகில் எழுதியுள்ளார். இந்த கோளாறுகள் காரணமாக தன்னால் தொடர்ந்து நிற்க முடியாத நிலை உள்ளதாக கூறியிருக்கும் அவர், தான் நடித்துள்ள புத்தா படத்திற்கான விளம்பர பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும்; இந்த நேரத்தில் இப்படி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.