Friday, June 10, 2011
ஒரு சினிமா எடுப்பதைவிட, அந்த சினிமாவை பப்ளிசிட்டி செய்வதில்தான் படத்தின் வெற்றியும், தோல்வியும் அடங்கியிருக்கிறது என்பதை சமீபத்திய படங்களின் சில வெற்றிகள் நிரூபித்திருக்கின்றன. அந்த வகையில் சிம்பு, தான் அடுது்து நடிக்கும் ஒஸ்தி படத்தின் பப்ளிசிட்டிக்காக கல்வியில் ஜெயித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார். படத்திற்கு ப்பளிசிட்டிக்கு, பப்ளிசிட்டியும் ஆச்சு; மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என கருதிய படக்குழு, சமீபத்தில் நடந்த பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது.