Friday 10 June 2011
தினமும் 2 மணி நேரம் “யோகா” செய்ததால் அழகு கூடிவிட்டது -சினேகா
Friday, June 10, 2011
சினேகா நடித்த “பொன்னர் சங்கர்” படம் தேர்தலுக்கு முன் ரிலீசானது. தற்போது “முரட்டுக்காளை”, “விடியல்”, “நூற்றுக்கு நூறு” படங்களில் நடித்து வருகிறார்.
“ரஜானா” என்ற தெலுங்கு படத்திலும் “மேட்டேட்” என்ற இந்தி படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சக நடிகைகள் கவர்ச்சியில் நீச்சல் உடைவரை வந்து விட்டனர். ஆனால் சினேகா அது போன்று நடிக்க மாட்டேன் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார்.
குடும்ப பாங்கான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். சினேகா தோற்றத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட அழகாக மாறி இருக்கிறார். இதுபற்றி கேட்ட போது சினேகா கூறியதாவது:-
என் அழகுக்கு யோகா தான் காரணம் தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறேன். இது எனக்கு நிறைய பலன் அளித்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். நிறைய நேரங்களை என் குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன் என்றார்.