Sunday, May 22, 2011
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வெளிநட்டில் இருந்து டாக்டர்கள் வருகின்றார்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்nullர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை சிகிச்சை பெற்றார். கடந்த 13ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது நுரையீரலில் நீnullர் கோர்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் ரஜினிக்கு மூச்சுத்திணறல் இருப்பது கண்டறியப்பட்டது. சிறு நீரகம் லேசாக பாதிக்கப்பட்டு காலில் வீக்கமும் ஏற்பட்டது. டாக்டர்கள் சிறிய ஆபரேஷன் மூலம் நீnullர் கோர்ப்பை அகற்றினர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் இட்லி வடை சாப்பிடுவதாக சிகிச்சை அளிக்கும் டாக்டர் தணிகாசலம் கூறினார். இன்று அல்லது நாளை தனியறைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது. ரஜினிக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்கள் நாளை வர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி நலம் பெற ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்யும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதை கேட்டதும் நெகிழ்ச்சியடைந்தார். nullரண நலம் பெற வாழ்த்து செய்தி வெளியிட்டவர்கள், ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்தவர்கள் விவரங்களும் தெரிவிக்கப்பட்டன. டிஸ்சார்ஜ் ஆனதும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளார்.ஆஸ்பத்திரியில் அடிக்கடி தியானம் செய்கிறார் என்றும் ராகவேந்திரா, சீரடி சாய்பாபா ஆகியோரின் பெயர்களை சொல்லி மருந்துகளை சாப்பிடுகிறார் என்றும் ராணா பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.
ரஜினி உடல்நிலை குறித்து வெளிநாட்டு டாக்டர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்கள் ஆஸ்பத்திரியில் இருப்பார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.