‘காதல் கதைகளுக்காக காத்திருக்கிறேன்’ என்றார் ஜனனி அய்யர். மேலும் அவர் கூறியதாவது: ‘அவன் இவன்’ படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். முதல் படத்திலேயே என்னை டப்பிங் பேச வைத்தார் இயக்குனர் பாலா. என் குரல் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பார்க்க, அமுல் பேபி மாதிரி இருக்கிறேன் என்கிறார்கள். மற்றவர்கள் சொல்வதை ரசிக்கிறேன். ‘அலைபாயுதே’ போல் மென்மையான காதல் கதைகளுக்காகக் காத்திருக்கிறேன். அது போன்ற கதைகளில்தான் என் திறமைகளை காட்ட முடியும் என நினைக்கிறேன். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது.