Saturday, 2 July 2011
கவர்ச்சியாக நடிக்க நான் ரெடி;மல்லிகா
Saturday, July 02, 2011
சேரனின் ஆட்டோ கிராப் படத்தில் அறிமுகமானவர் மல்லிகா. விஜய்யின் திருப்பாச்சி படத்தில் அவரது தங்கையாக நடித்தார். பின்னர் மலையாளம், கன்னடப்படங்களில் நடித்து வந்தார்.
இப்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து மல்லிகா அளித்த பேட்டி வருமாறு:-
கதையோடு கூடிய கவர்ச்சி என்றால் கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை. ஒவ்வொரு நாளும் சினிமாவின், வளர்ச்சியும் போக்கும் மாறி மாறி நிகழ்கின்றது. வேகமான வளர்ச்சிக்கும் நிறைவான நடிப்பிற்கும் ரசிகர்களின் ஆதரவிற்கும் என்ன தேவையோ அதை நடிகைகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆகவே திரையுலக பயணத்தில் எனக்கென்று ஒரு பாதை அமைப்பதை விட, படம் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பிற்கும், இயக்குநர்களின் கற்பனைக்கும் ஏற்ப நடிப்பதே நல்லது என்றார்.