Saturday, 2 July 2011
எனக்கு நடிக்க தெரியாதா? ஹன்சிகா ஆவேசம்
Saturday, July 02, 2011
எங்கேயும் காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி, தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது விஜய் ஜோடியாக வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.
ஹன்சிகாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்றும் எங்கேயும் காதல் படத்தில் சரியாக நடிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-
எனக்கு நடிக்க தெரியவில்லை என்று விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. இந்தியில் நான் நடித்த சிரியலுக்காக 14 விருதுகள் வாங்கி இருக்கிறேன். தெலுங்கில் நான் நடித்த தேசமுத்ரா படத்துக்கும் விருது வாங்கியுள்ளேன்.
நடிக்காமல் எப்படி இவ்வளவு விருதுகள் வாங்க முடியும். சினிமாவுக்கு நான் விருப்பப்பட்டுதான் வந்தேன். இதுவரை 15 படங்களில் நடித்து விட்டேன். நடிப்பதற்கு நான் கஷ்டப்படவில்லை. விஜய்யுடனும் உதய நிதி ஸ்டாலினுடனும் நடித்து வருகிறேன். கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து உள்ளேன்.