தெலுங்கில் இந்தப் படம் பெற்ற வெற்றி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையில் மயங்கித்தான் தமிழில் தில்லாலங்கிடி என எடுத்தனர். தெலுங்கில் தான் செய்த அதே வேடத்தை தமிழிலும் செய்தார் ஷாம். படம் பரவாயில்லை எனும் அளவுக்கு போனது. அடுத்து கன்னடத்தில் கிக் என்ற பெயரில் வெளியாகி வெற்றியும் பெற்றது. இப்போது இதே 'கிக்' இந்திக்கும் போகிறது. இதில் நடிக்கப் போகிறவர் சல்மான் கான். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் ஷாமைச் சந்தித்த சல்மான், கிக் படத்தில் ஷாம் நடிப்பை புகழ்ந்து தள்ளினாராம். இந்தப் படத்தை இந்தியில் படம் செய்யப் போவதாகவும், அதில் கண்டிப்பாக ஷாம் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஷாம், "தெலுங்கு, தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளும் அந்த வேடத்தை நடித்துவிட்டேன். இப்போது இந்தியிலும் அந்த வாய்ப்பு தொடர்ந்தால் மகிழ்ச்சி", என்று கூறினாராம். உடனே சல்மான், 'இந்தியில் உங்கள் ஆரம்பம் இந்தப் படம் மூலம் இருக்கட்டும்' என்று கூற, ஷாம் சந்தோஷத்துடன் கடவுளுக்கு நன்றி சொன்னாராம். |