Tuesday, April 26, 2011
தமிழ் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட நடிகை சங்கீதா, பிதாமகன் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு என்று அறிவித்து விட்டு, ஒரிரு ஆண்டுகளில் மீண்டும் கணவர் சம்மதத்துடனோ அல்லது கணவரை விவாகரத்து செய்து விட்டோ மீண்டும் வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளுக்கு மத்தியில் அம்மணியின் நினைப்பே வேறு. இளமை இருக்கும்போதுதானே சம்பாதிக்க முடியும். இது எனக்கு ஓய்வெடுக்கும் வயது இல்லை என்று கூறி தொடர்ந்து நடித்து வருகிறார்.
கல்யாணத்திற்கு பிறகும் இவருக்கு வாய்ப்புகள் வருகிறது என்றால், அது இவரே ஏற்படுத்தி வைத்திருக்கிற எதிர்மறையான நடிப்பால் மட்டும்தான்.
உயிர் படத்திலிருந்து அண்மையில் வெளிவந்த மன்மதன் அம்பு வரைக்கும் சங்கீதாவை ரசிப்பது அந்த கவர்ச்சியான நடிப்புக்காகதான்.
தற்போது சங்கீதா இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கும் புதிய படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கும் புகழேந்தி, இந்த படத்தில் சங்கீதாவுக்கு முக்கிய கதாபாத்திரத்தை ஒதுக்கியிருக்கிறாராம்.
படத்தின் படபிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சங்கீதா தொடர்பான ஒருநாள் படபிடிப்பு மட்டும் பாக்கி இருந்ததாம்.
அந்த நேரத்தில்தான், நான் வெளிநாடு போகவேண்டும் என்று கிளம்பிவிட்டாராம் சங்கீதா. அதுவும் வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என்று கூறிவிட்டார்.
முன்னரே சொல்லியிருந்தால் அந்த ஒரு நாள் படபிடிப்பை முடித்து இருப்பேன் என்று பதறிவிட்டாராம் இயக்குனர். ஆனாலும் சுற்றுலாவை ரத்து செய்யவில்லை சங்கீதா.