Tuesday, May 24, 2011
தேர்தல் முடிவுக்குப் பிறகு இப்படி கஞ்சா கருப்பு வசம் போன படங்களின் எண்ணிக்கை மூன்று. அதில் முக்கியமான படம் "மன்னார் வளைகுடா". இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் கொமெடியன் வேடம். இயக்குபவர் மாதேஷின் முன்னாள் உதவியாளர் தனசேகரன்.
மீனவர்கள் பிரச்சினையைப் பேசும் நகைச்சுவைப் படம் இது. ஆரம்பத்தில் வடிவேலு தான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தாராம். யோகா என்ற பெங்களூரு அழகி தான் இதில் கதாநாயகி. தேர்தல் முடிவுக்கு முன்பே, வடிவேலு தூக்கப்பட்ட படம் ராணா. இதில் அவருக்கு தரப்பட்ட வேடத்தை கஞ்சா கருப்புவுக்கு கொடுத்துள்ளனர். இன்னும் சில படங்களிலும் வடிவேலுவுக்கு எழுதி வைத்த கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
வடிவேலு அளவுக்கு கொமெடியில் கலக்கி புதிய இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா கஞ்சா கருப்பு.