
இதனால் தனது டுவிட்டரில் தற்போது அதற்கு மறுப்பு செய்தி கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
செய்திகள் வெளியானது போல் நான் கர்ப்பமடையவில்லை. எப்படி இப்படியொரு செய்தி வெளியானது என்றே எனக்கு தெரியவில்லை. அதனால் இந்த வதந்தியை எனது அபிமானிகள் யாரும் நம்ப வேண்டாம். மேலும் மீடியாக்கள் இதுபோன்று வதந்தி பரப்புவதால் பிரபலங்களான என்போன்றோருக்கு நிம்மதி கெடுகிறது என்றும் தனது மனவேதனையை தெரிவித்திருக்கிறார் ஷில்பாஷெட்டி.
மேலும், நிஜமாகவே நான் கர்ப்பமானால் அந்த சந்தோசமாக செய்தியை அனைவருக்கும் நானே தெரிவிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார் ஷில்பா.