Tuesday, June 07, 2011
நடிகை அசின் கூறியது: தமிழ், தெலுங்கு, மலையாளத்திலிருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், திரும்ப திரும்ப ஒரே பாணியிலான வேடம் என்பதால் ஏற்கவில்லை. ஆச்சர்யப்படக்கூடிய வித்தியாசமான வேடத்துக்காக காத்திருக்கிறேன். இந்தியில் ‘ரெடிÕ படத்தில் நடித்தேன். தெலுங்கில் இப்படத்தில் ஜெனிலியா நடித்திருந்தார். ஆனாலும் அவரது நடிப்பையோ ஸ்டைலையோ நான் பின்பற்றவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. என்னுடைய டைரக்டர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். படம் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. கவர்ச்சி உடைகளை அணிய மறுக்கிறீர்களா என கேட்கிறார்கள். கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் சிறிய அளவில்தான் வித்தியாசம். கிளாமர் உடைகள் அணிவதில் ஆட்சேபணை இல்லை. அது கமர்ஷியலுக்கு தேவை என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஆபாசமாக உடை அணிய விருப்பமில்லை. எனக்கு எந்த வேடம் பொருந்துமோ அதை மட்டுமே செய்கிறேன். இதை மற்றவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கால்ஷீட் கேட்டு வருபவர்களும் இதை மனதில் வைத்தே கதை சொல்கிறார்கள்.