Monday, June 06, 2011
பிரபல தெலுங்கு நடிகை ஹன்சிகா. இவர் “எங்கேயும் காதல்” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தற்போது “வேலாயுதம்” படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
பிரபுதேவாவும் ஹன்சிகாவும் காதலிப்பதாகவும் வேலாயுதம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாகவும் அவரைப்பற்றி செய்திகள் வந்தன.
இதற்கு பதில் அளித்து ஹன்சிகா கூறியதாவது:-
“வேலாயுதம்” படத்தில் முத்தக்காட்சியில் நான் நடிக்கவில்லை. கன்னத்தில் முத்தமிடுவது போன்றுதான் ஒரு காட்சி உள்ளது. முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. “எங்கேயும் காதல்” படத்தை இயக்கியவர் பிரபுதேவா. அப்படத்தின் கதாநாயகி என்ற முறையில் அவரிடம் பேசி பழகினேன்.
அது காதல் இல்லை. சகோதர சிந்தனையோடுதான் அவரை பார்க்கிறேன். பல தடவை இதை மறுத்த பிறகும் தெலுங்கு இணைய தளங்களில் தொடர்ந்து எங்களுக்குள் காதல் இருப்பதாக செய்திகள் பரப்புகின்றனர்.
இந்த கிசு கிசுக்களை எனக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளாகவே கருதுகிறேன். திட்டமிட்டு இவை பரப்பப்படுகின்றன. காதலிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. எனது ராசி எண் 9. நான் ஆகஸ்டு 9-ல்தான் பிறந்தேன். எனவே ஹன்சிகா மோட்வானி என்ற பெயரை நியூமராலஜிப்படி ஹன்சிகா என மாற்றி உள்ளேன்.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.