Friday, June 24, 2011
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கிய ஜெகன், சேரனின் உதவியாளராக இருந்தவர். நடைபெற்று முடிந்த இயக்குனர் சங்க தேர்தலில் சேரன்,
அமீர் குழுவினருக்கு எதிர்நிலையில் நின்று , முழுவதும் உதவி இயக்குனர்களைக் கொண்ட புதிய அலைகள் அணியை உருவாக்கி இருப்பவர். இவரது இயக்கத்தில் காவல் என்ற படத்தில் முழுநீள காவல் அதிகாரி காதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். சீமானுக்கும் ஜெகனுக்கும் அத்தனை நெருக்கம்.
புதிய அலைகளை உருவாக்கியதில் இவர் மட்டுமல்ல, ஜெகதீஷ், அஸ்லாம் உட்பட நான்கு சீமானின் உதவி இயக்குனர்கள் புதிய அலைகள் அணியில் செயற்குழுவுக்கு போட்டியிட்டார்கள்.
முக்கியமாக நாம் தமிழர் இயக்கம் துவங்கப்பட்ட போது அந்த இயக்கத்திற்காக குரல் கொடுத்த முக்கிய இயக்குனர்களூம் இந்தத்தேர்தலில் நின்றார்கள்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் சப்போர்ட் செய்ய வேண்டிய சீமான், பேச்சுக்கு கூட என் தம்பிங்களுக்கு ஓட்டு போடுங்க என்று கேட்கவில்லை என்று குமுறுகிறார்கள் புதிய அலைகள் அணியினர்.
பன்னிரெண்டு செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிட்ட புதிய அலைகள் 7 இடங்களை கைப்பற்றி இருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சீமான் புதிய அலைகளுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தால் 12 இடங்களிலும் வென்று காட்டியிருப்போம் என்கிறார்கள்.
ஆனால் பாரதிராஜா, அமீர் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாராம் சீமான். இத்தனைக்கும் இயக்குனர் ஜெகன், சீமானின் பகலவன் படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றப் போகிறார்!
ஆனால் இதற்காகவெல்லாம் பாரதிராஜா அமீரை பகைத்து கொள்ள முடியாது என்று முடிவெடுத்து விட்டார் சீமான். காரணம் பாரதிராஜா, சீமானுக்கு சினிமா குருநாதன்.
அமீரோ தன்னுடன் ஈழபிரச்சனைக்காக சிறைக்கு வந்த சகா! உதவி இயக்குனர்களை கைவிட்டாலும் இவர்களை கைவிட முடியாது என்று முடிவு செய்து விட்டாரோ சீமான்?