Friday, June 17, 2011
அடச்சே! இப்படியொரு கதைக்களம் இருகிறது நம்ம புத்திக்கு எப்படி எட்டாமப்போச்சு என்று முன்னனி இயக்குனர்கள் பொறாமைபடும் அளவுக்கு யாரும் கைவைக்காத கதை களத்தை ஒவ்வோருமுறையும் கையிலெடுப்பார் பாலா.
பொதுவாக தனது படங்களை உருவாக்கி முடிக்க குறைந்தது இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்ளும் பாலா, முதன் முறையாக ஒரே ஆண்டில் எடுத்து முடித்து இருக்கும் அவன் இவன் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
முதன் முறையாக காமெடியை அடிப்படையாகக் கொண்ட கதையில் கடைசி இருபது நிமிடங்கள் தனது முத்திரையைப் பதித்து இருக்கும் பாலா, இந்தப்படத்தில் ஆர்யாவை சாகடித்து இருக்கிறாராம். இப்படத்தில் வால்டர் வணங்காமுடி என்ற காதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விஷாலுக்கு தேசிய விருது உறுதி என்று பாலாவே சொல்லியிருப்பது படம் குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்து இருகிறது.
இது வரை உலகின் எந்த மொழிப் படத்திலும் மாறுகண் உடையவராக எந்த ஹீரோவும் நடித்தது இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட கின்னஸ் நிறுவத்தின் தமிழகப்பிரநிதி, விஷாலை தொடர்புகொண்டு முறையாக விண்ணபிக்குமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து, வேர்ல்டு ஃபர்ஸ்ட் ஆர்டிஃபீஸியல் ஸ்பிளிண்ட் ஆக்டிங் இன் லீட் ரோல் என்ற தலைப்பின் கீழ் விஷால் விண்ணபித்து இருகிறாராம்.
கின்னஸ் வேல்ட் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் விஷால் விண்ணப்பத்தை பரிசீலித்து சான்றிதழ் வழங்கும் என்கிறார்கள் இயக்குனர் பாலா அலுவலகத்தில்.