Friday, June 17, 2011
தமிழ்-தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார் காஜல்அகர்வால். “மாற்றான்” படத்தில் சூர்யா ஜோடியாகியுள்ளார்.
காஜல் அகர்வால் சொல்கிறார்:-
சினிமாவில் நிறைய கற்றுக்கிட்டேன். நடிகைகளுக்குள் போட்டி உள்ளது. இது ஆரோக்கியான போட்டியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. பொறாமை கூடாது. நம்பர் 1 நடிகை ஆவதில் நம்பிக்கை இல்லை. அதிக உழைப்பை கொடுக்கனும்.
எவ்வளவு பலன் கிடைக்குமோ அதை எடுத்துக்கனும். சினிமாவில் அழகை வைத்து மட்டும் நிலைக்க முடியாது. திறமை இருந்தால்தான் வரவேற்பார்கள். இல்லாவிட்டால் ஓரம்கட்டி விடுவார்கள்.
நான் யாரையும் காதலிக்கவில்லை. காலேஜில் படித்தபோது நிறைய காதல் கடிதங்கள் வந்துள்ளன. பள்ளி, கல்லூரியில் வரும் காதல் உண்மையானது அல்ல. ஒரு ஈர்ப்புதான். அப்போது பெற்றோர் காட்டும் அன்பைதான், பெரிதாக நினைக்க வேண்டும். கல்லூரியை தாண்டி வரும் காதல்தான் உண்மையான காதலாக இருக்கும் என்றார்.