Thursday, June 16, 2011
தமிழில் நான் அவன் இல்லை - 2, தாரம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்வேதா மேனனுக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் இன்னும் இருதினங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. மலையாளத்தை சேர்ந்தவரான ஸ்வேதா மேனன், மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கயம், தமிழில் (தாரம்) படம் இளைஞர்களின் சூட்டை கிளப்பியது. இந்நிலையில் இவருக்கு இன்னும் சிலதினங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. மும்பையை சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை ஸ்வேதா மேனன் திருமணம் செய்ய இருக்கிறார். இதுகுறித்து ஸ்வேதா மேனன் கூறியதாவது, எனக்கும், ஸ்ரீவல்சன் மேனனுக்கும் முதலில் நட்பாகத்தான் பழக்கம் ஏற்பட்டது. இப்போது, இந்த நட்பு காதலாகி மாறி இருக்கிறது. எங்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். இன்னும் இருதினங்களில் அதாவது ஜூன் 18ம் தேதி எங்களது திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான நடிகைகள் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விடுவர். ஆனால் என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.