சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ராணா' படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தில் வடிவேலு நடிக்க மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணாவில் வடிவேலுவுக்கு தருவதாக இருந்த பாத்திரத்தை அரசியல் காரணங்களால் கஞ்சா கருப்புக்கு கொடுத்தார். இதற்கிடையே, ராணா பற்றிய தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்த வடிவேலு, ரஜினியை சந்திக்க முயன்றார். ஆனால் உடல்நிலையால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரை, நடிக்க வடிவேலு பார்க்க முடியாமல் போனது. தற்போது உடல்நலம் சீரடைந்து, மீண்டும் ராணா பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள ரஜினிக்கு, வடிவேலுவின் நிலை சொல்லப்பட்டதாம், இதைத் தொடர்ந்து, ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்க்க முடிவு செய்து, அதை இயக்குநர் ரவிக்குமாரிடமும் ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், வடிவேலுவுக்கு பதில் சேர்க்கப்பட்ட கஞ்சா கருப்புவும் படத்தில் இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இயக்குனர் ரவிக்குமாரிடம் தான் கேட்க வேண்டும்.