மேதை படத்தின் தயாரிப்பாளரும், பிரபல தயாரிப்பு நிர்வாகியுமானவர் சீர்காழி சிவசங்கரன். இவர் தான் "லாலி" படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகை பபிதாவின் மகளும், கவர்ச்சி நடிகையுமான லக்ஷா உள்ளிட்டவர்களை தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலுக்கு அழைத்து சென்றவர். இவர்களுடன் சென்ற பலர் அங்கு மாயமாகிவிட, படக்குழுவில் வந்த மொத்த பேரும் வந்தால் தான் இந்தியா திரும்ப முடியும் என, லக்ஷா உள்ளிட்டவர்களின் பாஸ்போர்ட்டை அந்த ஊர் குடியுரிமை அதிகாரிகள் முடக்கி வைத்து, கைது செய்ததும், பின்னர் விடுதலையானதும் ஞாபகமிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் படப்பிடிப்பு விசாவில் படக்குழுவிற்கு சம்பந்தமில்லாத பலரை அழைத்து போய், அந்த ஊரில் வேலைக்கு விட்டு விட்டு வந்து துட்டு சம்பாதிப்பதில் கெட்டிக்காரராம் இந்த சிவசங்கரன்.
இதே மாதிரி கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசியாவிற்கும் இதே படக்குழுவில் பலரை அழைத்து போய் அங்கேயே விட்டு, விட்டு வந்து இங்கேயே துட்டு பார்த்ததில் மலேசிய குடியுரிமை அதிகாரிகளிடம் பிடிபட்டு எச்சரிக்கை செய்து அனுப்பபட்டவர்தானாம் இந்த தயாரிப்பு நிர்வாகி!கோடம்பாக்கத்தில் எப்படியெல்லாம் கோல்மால் நடக்கிறது என்று பாருங்கள்!!