முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. சின்ன அசின் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபட்ட பூர்ணாவிற்கு தமிழில் எந்தபடமும் அவருக்கு பெயர் பெற்று தரும்படியாக அமையவில்லை. கடைசியாக வந்த ஆடுபுலி படமும் வந்த வேகத்தில் சென்று விட்டது. தற்போது பார்த்திபனுடன் "வித்தகன்", நந்தாவுடன் "வேலூர் மாவட்டம்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். தொடர்ந்து தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் பூர்ணா, இப்போது கன்னடத்தில் கோமலுடன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் இவருடைய கேரக்டர், மாயாவி படத்தில் ஜோதிகா நடித்தது போன்று பேசப்படுமாம். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இதுதவிர தெலுங்கு படம் ஒன்றில் கல்லூரி மாணவியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது. படத்தில் வரும் தன்னுடைய கேரக்டர்(ஸ்ருதி) பற்றி டைரக்டர் சொன்னதில் இருந்து, எப்போதும் ஸ்ருதி பற்றிய நினைப்பு தானாம். காலை எழுந்தது முதல் இரவு தூங்க போகும் வரை ஸ்ருதி நினைப்பாகவே இருக்கிறாராம் பூர்ணா.