
நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லீங்க. தமிழ் ரசிகர்கள்தான் எனக்கு வாழ்வு கொடுத்தவங்க. அதனால பாரபட்சமெல்லாம் காட்டவே மாட்டேன், என்று அடித்துச் சொல்லும் தமன்னா, தெலுங்கில் தொடர்ந்து 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் தமிழில் அதிக படங்களை கமிட் பண்ண முடியவில்லை. பொதுவாகவே நான் டைரக்டர் என்ன சொல்கிறாரோ... அதன்படிதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எந்த மாதிரி காஸ்ட்யூம் கொடுத்தாலும் அதனை ஏற்று, அதனை அணிந்து நடிக்கிறேன். தமிழில் என் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்கிறேன். தெலுங்கில் பாடல் காட்சிகளில் கொஞ்சம் கிளாமரை எதிர்பார்க்கிறார்கள். அதனால் அப்படி நடிக்கிறேன். அதுமாதிரி தமிழிலும் கிளாமர் தேவையென்றால் அப்படி நடிக்க நான் ரெடியாகவே இருக்கிறேன், என்கிறார் தடாலடியாக! அப்போ சரிதான்!!